சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், மகாராட்டிராவில் பா.ஜ.க.விற்கு மக்கள் எதிராக வாக்களித்ததால் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மக்கள் கருத்தை ஏற்று மற்ற 3 கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டன.
இந்நிலையில் திடீர் திருப்பமாக பா.ஜ.க. ஆட்சி அமைத்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது. பா.ஜ.க.வுடன் சேர்ந்து தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அமைத்தது ஜனநாயகத்திற்கும் நாட்டிற்கும் சரியானதல்ல. இது முழுமையான சந்தர்ப்பவாத அரசியலாகும்.
மகாராஷ்டிராவில் தேர்தலை தவிர்க்க பா.ஜ.க. இல்லாத ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தந்தது. ஒருபோதும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க விரும்பவும் இல்லை. சிவசேனா தான் ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் அதற்கு ஆதரவு தந்தது.