சென்னை : விழுப்புரம் கோட்டத்தைச் சேர்ந்த அரசு பேருந்து திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்றது. கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே 100 அடி சாலையில் சென்ற போது, பேருந்தின் அடிப்புறத்தில் கரும்புகை வந்துள்ளது.
இதனை சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் கவனித்து பேருந்து ஓட்டுநரை எச்சரித்தனர். அதனைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் விரைந்து செயல்பட்டு பேருந்தை சாலையின் ஓரம் நிறுத்தி பயணிகளை கீழே இறங்க அறிவுறுத்தினார்.
தீப்பிடித்த பேருந்து
அதனடிப்படையில் பயணிகள் அனைவரும் கீழே இறங்கிய நிலையில், எஞ்சின் பகுதியில் பிடித்த தீ மளமளவென பரவி பேருந்து முழுவதும் எரிந்தது. தீ விபத்து தொடர்பாக கோயம்பேடு, அசோக் நகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.