தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை மருந்து குடோன் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் - Drug godown Fire

சென்னையில் உள்ள தனியார் மருந்து குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன.

சென்னை மருந்து குடோன் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
சென்னை மருந்து குடோன் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

By

Published : Oct 24, 2022, 1:55 PM IST

சென்னை:அசோக் நகர் இரண்டாவது அவென்யூவில் இயங்கி வரும் தனியார் நிறுவனம், மொத்த விற்பனையாளர்களிடம் மருத்துவ பொருட்களை வாங்கி மருந்து கடைகளுக்கு விநியோகம் செய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (அக் 24) காலை, இதன் குடோனில் திடீரென கரும்புகை கிளம்பிய தீ, அடுத்த சில நிமிடங்களில் மளமளவென குடோன் முழுவதும் பரவியுள்ளது.

இதனையடுத்து அருகில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அசோக் நகர், கோயம்பேடு மற்றும் விருகம்பாக்கம் உள்ளிட்ட 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நிறுவனத்தின் வெளிப்புறத்தில் நிற்க வைத்திருந்த கார் உள்பட மூன்று வாகனங்களில் பரவிய தீயை அணைத்தனர்.

சென்னை மருந்து குடோன் தீ விபத்து

தொடர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்ற தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் மூன்று வாகனங்கள், குடோனில் வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான முககவசங்கள் மற்றும் பஞ்சுகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் எரிந்து சேதமானது.

மேலும் பட்டாசு வெடிக்கும்போது ஏதேனும் தீ பரவி வாகனங்களில் தீப்பிடித்து, பின்னர் குடோனில் தீ பரவி இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:வீடியோ: சென்னையில் தனியார் மருந்து குடோனில் பயங்கர தீ விபத்து

ABOUT THE AUTHOR

...view details