தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துபாயிலிருந்து சென்னை வந்த 2 விமானங்களில் ரூ.93.5 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து சென்னைக்கு இரண்டு விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.93.5 லட்சம் மதிப்புடைய 2 கிலோ தங்கம், 38 பழைய லேப்டாப்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

By

Published : Nov 19, 2022, 10:32 PM IST

துபாயிலிருந்து சென்னை வந்த 2 விமானங்களில் ரூ.93.5 லட்சம் மதிப்புடைய பொருட்கள் பறிமுதல்
துபாயிலிருந்து சென்னை வந்த 2 விமானங்களில் ரூ.93.5 லட்சம் மதிப்புடைய பொருட்கள் பறிமுதல்

சென்னை: துபாயிலிருந்து சென்னைக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது சென்னையை சோ்ந்த ஒரு ஆண் பயணி மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதித்தனர்.

அவருடைய உள்ளாடைகளில் தங்க செயின்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதோடு மட்டுமின்றி அவர் ஐபோன்களில் பயன்படுத்தும் பேட்டரிகள் எடுத்து வந்திருந்தார். அந்த ஐபோன் பேட்டரிகளுக்குள் தங்கத் தகடுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அதையும் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா். அவரிடமிருந்து 440 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனா்.

இந்நிலையில் துபாயிலிருந்து மற்றொரு விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமான பயணிகளையும் சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த 2 பயணிகளை சோதனை செய்தபோது உள்ளாடைகள் மட்டும் சூட்கேஸ்களில் தங்க கட்டிகள், அதோடு தங்கத்தை அரைத்து, தங்க பவுடர் போன்றவையும் மறைத்து வைத்திருந்தனர். அவர்கள் இரண்டு பேரிடம் இருந்தும் 810 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வருகை பகுதியில் உள்ள ஆண்கள் கழிவறைக்குள் உள்ள குப்பை தொட்டிக்குள் ஒரு சிறிய மின் மோட்டார் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அந்த மின் மோட்டாரை சுங்க அதிகாரிகள் கைப்பற்றி, அதை பிரித்து சோதித்த போது, அதனுள் தங்கத்தகடுகள் மற்றும் தங்க வளையங்கள் போன்றவைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து 400 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர்.

ரூ.93.5 லட்சம் மதிப்புடைய பொருட்கள் பறிமுதல்.

மேலும் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஒரு டிராலியில் ஒரு பை கேட்பாரற்று இருந்தது. அதை சுங்க அதிகாரிகள் எடுத்து சோதித்தபோது, தங்க கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்தனர். அதனுள் 350 கிராம் தங்க கட்டிகள் இருந்தன. அவைகளையும் கைப்பற்றினர். அதே பயணிகளிடமிருந்து 38 பழைய லேப்டாப்புகளையும் சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர்.

சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனைகளில், மொத்தம் ரூ. 93.5 லட்சம் மதிப்புடைய 2 கிலோ தங்கம், மற்றும் 38 லேப்டாப்புகள் கைப்பற்றப்பட்டு, 3 பயணிகளை சுங்க அதிகாரிகள் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னை பல்கலைக்கழக வினாத்தாளில் குளறுபடி... விசாரணை குழு அமைத்து அரசாணை

ABOUT THE AUTHOR

...view details