சென்னை:துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம் சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. இதில் வரும் பயணியர் சிலர் தங்கம் கடத்தி வருவதாக, சுங்கத் துறை அலுவலர்களுக்குத்தகவல் கிடைத்தது. இதையடுத்து, சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில், வெளியேற முயன்ற சென்னையைச்சேர்ந்த முகமது இப்ராஹிம் (37),மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சாதிக் அலி (40) ஆகிய இருவரையும் அலுவலர்கள் சந்தேகத்தில் சோதனை செய்தனர்.
அப்போது, அவர்களது பேன்ட் பாக்கெட்டில் தங்கப்பசை மற்றும் இரண்டு தங்க செயின்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றைப் பறிமுதல் செய்து ஆய்வு செய்ததில், ரூ.1.38 கோடி மதிப்புள்ள 2.98 கிலோ தங்கம் இருந்தது தெரிய வந்தது. மேலும், 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.