சென்னை:துபாய்,சாா்ஜாவிலிருந்து சென்னை வந்த சிறப்பு விமானங்களில் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.2.53 கோடி மதிப்புடைய 5.5 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்கத்துறை அலுவலர்கள், இதுதொடர்பாக சென்னை, திருச்சி, ராமநாதபுரம், விழுப்புரம், சேலம் மாவட்டங்களைச் சோ்ந்த 7 பயணிகளை கைதுசெய்தனர்.
மேலும் சென்னையிலிருந்து சாா்ஜாவுக்கு கடத்தமுயன்ற வெளிநாட்டு பணம் ரூ.24 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டு, சென்னையைச் சோ்ந்த 4 பயணிகளையும் சுங்கத்துறை அலுவலர்கள் கைது செய்துள்ளனர்.