சென்னை விமான நிலையத்திற்கு பெருமளவில் கடத்தல் பொருள்கள் கொண்டுவரப்படுவதாக விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத் துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சார்ஜாவிலிருந்து திருவனந்தபுரம் வழியாக சென்னைக்கு வந்த, விமான பயணிகளிடம் சுங்கத் துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரமேஷ் (28) என்பவரை சோதனையிட்டபோது, ஆடைக்குள் மறைத்துவைத்து கொண்டுவரப்பட்ட 512 கிராம் தங்கம் பறிமுதல்செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.18 லட்சமாகும்.