சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் ஜெயின் (32). இவர் பெரியமேடு சைடாம்ஸ் சாலையில் சொந்தமாக தங்க நகை செய்யும் பட்டறை நடத்தி வருகின்றார்.
இவரது கடையில் நகை செய்யும் தொழிலாளியாக சையதுல் இஸ்லாம் கசி, ரஹியுல் சர்தார் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிப்புரிந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி தங்க சங்கிலி செய்வதற்காக சந்தீப் ஜெயின் 222 கிராம் தங்க கட்டியை இருவரிடமும் கொடுத்துள்ளார்.
பின்னர் 25ஆம் தேதி சந்தீப் ஜெயின் பட்டறைக்கு வந்து தங்க நகையை பார்த்தப் போது நகை இல்லாததால், சந்தேகமடைந்த சந்தீப் ஜெயின் ஊழியர்கள் இருவருக்கும் செல்போனில் தொடர்பு கொண்டார்.
அப்போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் உடனடியாக சந்தீப் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:செயின் பறிப்பில் ஈடுபட்ட கும்பல் கைது: 8 சவரன் நகை, 8 இருசக்கர வாகனம் பறிமுதல்!