தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துபாயிலிருந்து சென்னைக்கு வந்த நபரின் சட்டை காலரில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த தங்கம்! - gold smuggling in shirt collar

துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.50 லட்சம் மதிப்புடைய 1 கிலோ 86 கிராம் தங்கத்தை சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

துபாயிலிருந்து சென்னைக்கு சட்டை காலரில் பதுக்கி வைத்து தங்கம் திருட்டு!!
துபாயிலிருந்து சென்னைக்கு சட்டை காலரில் பதுக்கி வைத்து தங்கம் திருட்டு!!

By

Published : Jun 17, 2022, 9:46 PM IST

சென்னை: துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.50 லட்சம் மதிப்புடைய 1 கிலோ 86 கிராம் தங்கத்தை சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறை பறிமுதல் செய்து,கடத்தி வந்தவர்களை கைது செய்து விசாரணை செய்தனர்.

துபாயில் இருந்து பெரிய அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க அதிகாரிகள் துபாயிலிருந்து சென்னை வரும் அனைத்து விமான பயணிகளையும்,தீவிரமாக கண்காணித்து,சந்தேகப்பட்ட பயணிகளை நிறுத்தி சோதனையிட்டனா்.

இந்நிலையில் இன்று அதிகாலை துபாயிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் கண்காணித்தனா். அப்போது நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி உடமைகளை சோதனையிட்டனா்.

அவர் கொண்டுவந்த பையில் துணிகளுக்கிடையே தங்க செயின்கள் மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனா்.மொத்தம் 8 புதிய தங்க செயின்கள் இருந்தன. அவைகளின் மொத்த எடை 856 கிராம். இதையடுத்து அதிகாரிகள் அந்த தங்க செயின்களை பறிமுதல் செய்தனா்.

துபாயிலிருந்து சென்னைக்கு சட்டை காலரில் பதுக்கி வைத்து தங்கம் திருட்டு!!
அதே இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த, சென்னையை சேர்ந்த மற்றொரு பயணியின் மீதும் சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடமைகளை சோதனையிட்டனர். உடமைகளில் எதுவும் இல்லை. ஆனால் அவர் அணிந்திருந்த சட்டை காலர் பெரிதாக தெரிந்தது. உடனே அவர் அணிந்திருந்த சட்டையை சோதனையிட்டனர். அதன் காலா் பகுதியில் 230 கிராம் தங்கப்பசையை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா்.ஒரே விமானத்தில் வந்த இரண்டு பயணிகளிடமிருந்து, ஒரு கிலோ 86 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 50 லட்சம். இதையடுத்து அதிகாரிகள் இரண்டு பயணிகளையும் கைது செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details