வெளிநாடுகளிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு பெருமளவில் கடத்தல் பொருள்கள் கொண்டு வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த கடலூரைச் சேர்ந்த அப்துல் ரசாக் (40), ராமநாதபுரத்தைச் சேர்ந்த இன்ஹானுல்லா (33), சிந்தா (49) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களை தனி அறைக்கு அழைத்து சோதனை செய்தபோது கடத்திவந்த 46 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 1.9 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.