தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விமானத்தில் கடத்திவரப்பட்ட 6.5 கிலோ கிராம் தங்கம் பறிமுதல்! - gold smuggling

சென்னை: மலேசியாவிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.2.52 கோடி மதிப்புடைய 6.5 கிலோகிராம் தங்கம் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

விமானத்தில் கடத்திவரப்பட்ட 6.5 கிலோ தங்கம்

By

Published : Aug 26, 2019, 5:12 PM IST

Updated : Aug 26, 2019, 7:25 PM IST

மலேசியாவிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணி ஒருவர் தனது சூட்கேசில் ரூ.2.52 கோடி மதிப்புடைய 6.5 கிலோகிராம் தங்கம் பதுக்கி வைத்திருந்தார்.

விமானத்தில் கடத்திவரப்பட்ட தங்கம்

இதனைக் கண்ட அலுவலர்கள் பயணியை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இவர் சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்தவா் என்று கூறப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

இதேபோல் சென்னை சா்வதேச விமானநிலையம் பயணிகள் வருகை பகுதியில் உள்ள கழிவறையை, விமானநிலைய துப்புரவு பணியாளா் ஒருவா் நேற்று இரவு சுத்தம் செய்துள்ளார். அப்பொழுது, கழிவறை தண்ணீர் தொட்டிக்குள் கறுப்பு நிற சிறிய பாா்சல் ஒன்று கிடந்ததைக் கண்டு அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார். பின்பு, பாா்சலை எடுத்து பிரித்து பாா்த்தபோது 200 கிராம் மதிப்புள்ள 2 தங்கக் கட்டிகள் இருந்தன.

விமானத்தில் கடத்திவரப்பட்ட 6.5 கிலோ தங்கம்

சென்னை விமானநிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனைகளில் 3.7 கோடி ரூபாய் மதிப்புடைய தங்கம், போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Last Updated : Aug 26, 2019, 7:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details