சென்னை: துபாயிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமான பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஆண் பயணி மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி அவருடைய உடமைகளை சோதனை செய்தனர். உடைமைகளில் எதுவும் இல்லை. இதை அடுத்து அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று முழுமையாக சோதித்த போது, அவருடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த மூன்று பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
சென்னையில் 1.85 கிலோ எடையுள்ள தங்க பசை, செயின்கள் பறிமுதல் - From Dubai to Chennai
துபாயிலிருந்து விமானங்களில் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.82.5 லட்சம் மதிப்புடைய 1.85 கிலோ தங்க பசை, தங்க செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Etv Bharat
அந்த மூன்று பாா்சல்களிலும் இருந்தும் ரூ.46.15 லட்சம் மதிப்புள்ள 1.036 கிலோ தங்கப்பசைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கிடையே துபாயில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகளிடம் சோதனை நடப்பட்டது. அதில் ஒரு பயணியிடமிருந்து ரூ.36.26 லட்சம் மதிப்புள்ள 814 கிராம் எடை கொண்ட தங்க செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: ’பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்ய வேண்டும்...!’ ; போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை