குவைத் மற்றும் துபாயில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வந்த இரண்டு மீட்பு விமான பயணிகளை சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர்.
இதில் வந்த ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த ஜிகன் சுதாகரா(46) மற்றும் சென்னையைச் சேர்ந்த தமிமுன் அன்சாரி(33) ஆகிய இரண்டு பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று அவர்களின் உடமைகளை சோதனை செய்தபோது 15 தங்கக் கட்டிகளை வாஸ்லின் டப்பாவிலும், தங்க பசையை ஹேர் ஜெல் குப்பிகளிலும் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.