சென்னை:சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து விமானம் நேற்று மாலை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர்.
சென்னை வந்த கேரளாவைச் சேர்ந்த அபுதுசமன் என்ற பயணி ஒருவரை சோதனையிட்டதில், அவரது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 72.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1.486 கிலோகிராம் எடையிலான தங்கம் கைப்பற்றப்பட்டது.
அதே போன்று இன்று (மார்ச் 27) சார்ஜாவில் இருந்து சென்னை வந்த மற்றொரு முகமது ஜாசிர் என்ற பயணி கடத்தி வந்த 42.51 லட்சம் ரூபாய் மதிப்பிலான 880 கிராம் எடையிலான தங்கமும் கைப்பற்றப்பட்டது.
இரண்டு பயணிகளிடமிருந்து ஒரு கோடியே 14 லட்சம் மதிப்புடைய 2 கிலோ 366 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இரண்டு பயணிகளையும் சுங்கத்துறை அலுவலர்கள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:மொபைல் வாங்கித் தராததால் தாயைக் கொன்ற மகன்