சென்னை: துபாயிலிருந்து சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் இன்று (ஜூலை 20) காலை வந்தது. அதில் வந்த பயணிகளைச் சுங்கத் துறையினர் சோதனையிட்டனர்.
அப்போது விழுப்புரத்தைச் சோ்ந்த சந்துரு சக்திவேல் (23) என்ற பயணி மீது சுங்கத் துறையினருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
810 கிராம் தங்கம் பறிமுதல் பின்னர், அவரை நிறுத்தி சோதனையிட்டதில் அவருடைய உள்ளாடைக்குள் மறைத்துவைத்திருந்த நான்கு பாா்சல்களில் தங்க பேஸ்ட் வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர்.
மொத்தம் ரூ.40.35 லட்சம் மதிப்பிலான 810 கிராம் தங்கத்தைப் பறிமுதல்செய்தனர். இதையடுத்து சந்துரு சக்திவேலை கைதுசெய்த சுங்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: சிறு கவனக்குறைவு: அந்தரத்தில் பறந்து நொறுங்கிய புதிய கார்!