தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் ரூ.32 லட்சம் தங்கம் பறிமுதல்! இருவர் கைது - ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ்

சென்னை: துபாயிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ. 31.87 லட்சம் மதிப்புடைய 621 கிராம் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

தங்கம் பறிமுதல்
தங்கம் பறிமுதல்

By

Published : Jan 3, 2021, 6:05 PM IST

துபாயிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானம் இன்று காலை சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத் துறையினா் சோதனையிட்டனா்.

அப்போது சென்னையை சேர்ந்த தமீம் அன்சாரி சம்சூதீன்(28), தஞ்சாவூரை சோ்ந்த ஜாபா் அலி அப்துல்வகாப் (48) ஆகிய இரு பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து சந்தேகிக்கப்பட்ட இருவரையும் தனி அறைக்கு அழைத்து சென்று சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். சோதனையில், இருவரும் தங்களது உள்ளாடைகளில் தங்கபேஸ்ட்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

அவர்களிடமிருந்து ரூ.31.87 லட்சம் மதிப்புடைய 621 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து இருவரையும் கைது செய்த சுங்கத் துறையினர், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:நாளை முதல் பொங்கல் பரிசு விநியோகம்: தயார்நிலையில் ரேஷன் கடைகள்!

ABOUT THE AUTHOR

...view details