தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் 774 கிராம் தங்கம் பறிமுதல் - சென்னை விமான நிலையம்

துபாயிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்திவரப்பட்ட தங்கம், மின்சாதன பொருள்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்செய்யப்பட்டன.

smuggling  gold smuggling  chennai air port  gold smuggling in chennai air port  chennai air port  chennai news  chennai latest news  சென்னை செய்திகள்  சென்னை அண்மை செய்திகள்  தங்கக்கடத்தல்  கடத்தல்  சென்னை விமான நிலையம்  சென்னை விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்
தங்கம்

By

Published : Oct 8, 2021, 9:54 AM IST

சென்னை:துபாயிலிருந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு நேற்று (அக்டோபர் 7) வந்த ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகளை வழக்கம்போல் சுங்கத் துறையினர் சோதனையிட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த பயணி கருணமூர்த்தி (21) என்பவர் மீது சுங்கத் துறையினருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சுங்கத் துறையினர், அவரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். பின்னர் அவரிடம் விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததுள்ளார்.

தங்கம் பறிமுதல்

இதனால் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் உள்ளாடைக்குள் 774 கிராம் தங்கத்தை மறைத்து கடத்திவந்தது தெரியவந்தது. அதன் பன்னாட்டு மதிப்பு ரூ.32.77 லட்சம் ஆகும்.

மேலும் அவரது உடமைகளிலிருந்து இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மின்சாதன பொருள்களை சுங்கத் துறையினர் பறிமுதல்செய்துள்ளனர். இதையடுத்து அவரை கைதுசெய்து, அவரிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: ஓய்வுபெற்ற அரசு வழக்கறிஞர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை

ABOUT THE AUTHOR

...view details