மீட்பு விமானத்தில் தங்க கடத்தல்: ஒருவர் கைது - மீட்பு விமானத்தில் தங்க கடத்தல்
சென்னை: துபாயிலிருந்து சென்னை வந்த மீட்பு விமானத்தில் தங்கம் கடத்திவந்தவரை சுங்கத் துறையினர் கைதுசெய்தனர்.
![மீட்பு விமானத்தில் தங்க கடத்தல்: ஒருவர் கைது சுங்கத்துறையினர் பறிமுதல் செய்த தங்கம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-04:41:37:1603365097-tn-che-03-gold-smuggling-visual-script-7208368-22102020162807-2210f-1603364287-106.jpg)
துபாயிலிருந்து இன்று (அக்டோபர் 22) அதிகாலை ஏா்இந்தியா எக்ஸ்பிரஸ் மீட்பு விமானம் சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத் துறையினா் சோதனையிட்டனா்.
அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கீதிர் நைனா முகமது (50) என்ற பயணி மீது சுங்கத் துறையினருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டனா்.
சோதனையில் உடலுக்குள், பேண்ட் பாக்கெட்டில் சிறிய தங்க கட்டிகள், தங்க பேஸ்ட்கள் மறைத்துவைத்திருந்ததைக் கண்டுபிடித்தனா்.