சென்னை விமான நிலையத்தில் மலேசியாவிலிருந்து வந்த மதுரையைச் சேர்ந்த பயணி சந்தானலட்சுமி (39) என்பவரை சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். சோதனையின் போது, மேலாடைக்குள் 2 பர்சுகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதில், 85 தங்க சங்கிலிகள், 17 கைச்செயின்கள், இரண்டு ஹராம்,இரண்டு வளையல்கள், 15 மோதிரங்கள், 2 நெக்லஸ்கள், 13 டாலர்கள் இருந்தன. ஒரு கோடியே இரண்டு லட்சம் மதிப்புள்ள இரண்டு கிலோ 545 கிராம் தங்கத்தை பயணி சந்தானலட்சுமியிடம் சுங்கத்துறை அலுவலர்கள் கைப்பற்றினர். இதனைத்தொடர்ந்து அதே விமானத்தில் சென்னையைச் சேர்ந்த பாத்திமா(32) என்பவரின் மேலாடையில் மறைத்து வைத்திருந்த 18 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 428 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
இலங்கையிலிருந்து சென்னை பயணி இலங்கையைச் சேர்ந்த நிரோஷா லக்மி (26) என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தப்பட்டது. அவர், தனது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்தார். இதனையடுத்து அவரிடம், 13 லட்சத்து மூன்றாயிரம் ரூபாய் மதிப்புள்ள 299 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்திற்கு சென்று சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர்.
சுங்கத்துறை அலுவலர்களிடம் சிக்கிய தங்கம் அப்போது ஒரு இருக்கையின் அடியில் இரண்டு பைப்கள் இருந்தது. அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் 14 தங்கக் கட்டிகள் இருந்தன. 62 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 400 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் கைப்பற்றினர். மேலும், கேட்பாரற்று கிடந்த ஒரு கோடியே 96 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ 672 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: 'குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' - இயக்குநர் கௌதம
ன்