துபாயிலிருந்து சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு துபாய் எமிரேட்ஸ் சிறப்பு விமானம் இன்று (மே05) வந்தது. அதில், வந்த பயணிகளை சுங்கத் துறை அலுவலர்கள் சோதனை செய்தனர்.
அப்போது புதுச்சேரியை சேர்ந்த இளங்கோவன் பஞ்சநாதன்(46) என்ற பயணி மீது சந்தேகம் அடைந்த அலுவலர்கள், அவரது உடைமைகளை சோதனை செய்தனர். பின்னர், அவரை தனியே அழைத்துச்சென்று சோதனை செய்ததில், அவரது உள்ளாடைகளுக்குள் 3 தங்க பசை உருளைகள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. பின் அதனை பிரித்து பார்த்தபோது அதனுள் 578 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு 28 லட்சம் ஆகும்.