தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விமானத்தில் ரூ. 41.83 லட்சம் மதிப்புடைய தங்கம் கடத்தல் - திருச்சி பயணி கைது - திருச்சி பயணி கைது

துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.41.83 லட்சம் மதிப்புடைய தங்கப்பசையை கடத்தி வந்த திருச்சி பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

துபாய் விமானத்தில் ரூ.41.83 லட்சம் மதிப்புடைய தங்கம் கடத்தல்; திருச்சி பயணி கைது
துபாய் விமானத்தில் ரூ.41.83 லட்சம் மதிப்புடைய தங்கம் கடத்தல்; திருச்சி பயணி கைது

By

Published : Jul 13, 2022, 5:52 PM IST

சென்னை:துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது திருச்சியைச் சேர்ந்த ராஜன் (32) என்பவர் சுற்றுலாப் பயணிகள் வீசாவில் துபாய் சென்றுவிட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்தது தெரியவந்தது. அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்ததோடு அவருடைய உடமைகளையும், முழுமையாக சோதனையிட்டனர். உடைமைகளில் எதுவும் இல்லை.

ஆனாலும் சந்தேகம் தீராமல் அவரை, தனி அறைக்கு அழைத்துச் சென்று அவரது ஆடைகளை சோதனையிட்டனர். அப்போது அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ஒரு பார்சலில் தங்கப் பசை இருந்ததை கண்டுபிடித்தனர்.

அந்த பாா்சலில் 936 கிராம் தங்கப் பசை இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு 41.83 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. இதையடுத்து தங்க பசையை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், ராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:QR Code மூலம் அபராதம் வசூல் - சென்னை போக்குவரத்து காவல் துறை நடவடிக்கை

ABOUT THE AUTHOR

...view details