இலங்கையிலிருந்து ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு இன்று (நவம்பர் 25) காலை வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்கள் கண்காணித்து, சந்தேகப்படும் பயணிகளை நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த இரண்டு ஆண் பயணிகள், தங்களிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருள்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு, கிரீன் சேனல் வழியாக வெளியே சென்றனர்.
இதனால் அவர்கள் மீது சந்தேகமடைந்த சுங்கத் துறை அலுவலர்கள் இருவரையும் மீண்டும் உள்ளே அழைத்து சோதனை செய்தனர். அப்போது அவர்களின் உள்ளாடைகளுக்குள் நெகிழிப் பார்சல்களுக்குள் தங்கப்பசை இருந்தது தெரியவந்தது.
இரண்டு பாா்சல்களிலிருந்த இரண்டு கிலோ தங்கப்பசையின் மதிப்பு சுமார் 85.5 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து தங்கப்பசையைப் பறிமுதல்செய்த சுங்கத் துறை அலுவலர்கள், கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் தங்கம் கடத்தல்: 4 பெண்கள் கைது