சென்னை:துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த ஆண் பயணி மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரை நிறுத்தி விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதையடுத்து, அவருடைய உடைமைகளை சோதனை செய்தனர். உடைமைகளில் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும், சந்தேகம் தீராமல், அவருடைய சூட்கேஸை ஆய்வு செய்தனர்.