துபாயிலிருந்து சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு நேற்று (நவ.28) இரவிலிருந்து இன்று (நவ.29) காலை வரை மூன்று மீட்பு விமானங்கள் வந்தன. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.
சென்னை விமான நிலையத்தில் ரூ. 1.57 மதிப்பிலான தங்கம் பறிமுதல் - சுங்கத்துறை அலுவலர்கள்
சென்னை: துபாயிலிருந்து வந்த எட்டு மீட்பு பயணிகளிடம் இருந்து ரூ. 1.57 கோடி மதிப்பிலான தங்க நகைகளை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
அப்போது, திருச்சியைச் சோ்ந்த முகமது ஈசாக் (26), முகமது நாகூா்கனிபா (36), சாதிக் அலி (53), சிவகங்கையைச் சோ்ந்த முகமது கனி (48), ரகுமான் (22), அப்துல் கரீம் (32), காதா் ஹீமாயூன் (25), ராமநாதபுரத்தைச் சோ்ந்த சகுபாா் ஆசீக் (24) ஆகிய எட்டு பேரை சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையிட்டனா்.
அவர்கள் மறைத்து வைத்திருந்த தங்க சீட்களையும் அவா்களுடைய உள்ளாடைகளுக்குள் தங்க கட்டிகள், தங்க பேஸ்ட்களையும் பறிமுதல் செய்தனா். அதன் சா்வதேச மதிப்பு ரூ. 1.57 கோடி ஆகும். இதையடுத்து சுங்கத்துறையினர் எட்டு மீட்பு பயணிகளையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.