குவைத்திலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், சுங்க அலுவலர்கள் நடத்திய சோதனையில், 700 கிராம் எடையில் ரூ.20.5 லட்சம் மதிப்புள்ள
தங்கச் சாவிகள், தங்கச் சுத்தியல் ஆகியவை சிக்கியுள்ளன.
தங்கச் சுத்தியல் கடத்தல்; இருவர் கைது! - chennai
சென்னை: குவைத்திலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 20.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

gold
இதனை சூட்கேசுக்குள் மறைத்து கொண்டு வந்த ஆந்திரா மாநிலம் சித்தூரைச் சோ்ந்த வெங்கட் ரமணா (51), மகேந்திரவால் மெட்டி (24) ஆகிய இரண்டு பயணிகளை சுங்கத்துறை அலுவலர்கள் கைதுசெய்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.