தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என எழுந்த செய்தியையடுத்து சென்னை முழுவதும் தீவிரவாத தடுப்புக் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, தனியார் விடுதிகளில் அவர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
லாட்ஜில் ஐந்து கிலோ மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - சென்னை குற்றச் செய்திகள்
சென்னை: தனியார் விடுதி ஒன்றில் தீவிரவாத தடுப்புக் குழுவினர் மேற்கொண்ட சோதனையில், ஐந்து கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னை வால்டாக்ஸ் பகுதியில் பீமாஸ் லாட்ஜில் தீவிரவாத தடுப்புக் குழுவினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, உரிய ஆவணமின்றி வைத்திருந்த ஐந்து கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில், இந்த நகைகள் கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஜான்சன் (35) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. மேலும், இந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லையென்றும் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து வருமான வரித்துறை அலுவலர்களிடம்தீவிரவாத தடுப்புக் குழுவினர் தகவல் தெரிவித்தனர். தற்போது, அவர்கள் ஜான்சனிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றனர்.