தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை நிதிநிலை அறிக்கையின்போது மத்திய அரசு உயர்த்தியது. அதன்பின் ஆபரணத் தங்கத்தின் விலையானது கிடுகிடுவென உயரத் தொடங்கியது. இந்நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.192 உயர்ந்து 29,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த பத்து நாட்களில் ரூ.1,688 உயர்ந்துள்ளது.
விண்ணை தொட்டது தங்கத்தின் விலை - சவரன் ரூ.29 ஆயிரத்திற்கு விற்பனை - தங்கம் விலை உயர்வு
சென்னை: தொடர் உயர்வைச் சந்தித்துவரும் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று சவரன் ரூ.29 ஆயிரத்தை கடந்தது.
தங்கம் விலை உயர்வு
ஆகஸ்ட் 4ஆம் தேதி ரூ.27,328க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம் விலை இன்று ரூ.29ஆயிரத்தை கடந்தது. தங்கத்தின் விலை விண்ணைமுட்டும் அளவிற்கு தொடர் உயர்வை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.