தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உச்சம் தொட்ட தங்கம் விலை: சவரனுக்கு ரூ.80ஆக உயர்வு! - தங்கம் விலை அதிகரிப்பு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 ஆக உயர்ந்து, ரூ.37,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம்
தங்கம்

By

Published : Jun 11, 2021, 1:19 PM IST

சென்னை: கரோனா தொற்றின் தாக்கத்தால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. அதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இன்று(ஜூன்.11) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

சென்னை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் கிராம் (22 கேரட்) ஒன்றுக்கு ரூ.4,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று(ஜூன்.10) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 4,607 ரூபாயாக இருந்தது.

அதேபோல் ஒரு கிராம் தூய தங்கம் (24 கேரட்) இன்று(ஜூன்.11) 4,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி 77.10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ வெள்ளி 77,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: ஹெல்மெட்டை கவ்விச் சென்ற காட்டு யானை - வைரலாகும் வீடியோ

ABOUT THE AUTHOR

...view details