தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்துவந்த நிலையில் இன்று (ஜன.27) தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4 ஆயிரத்து 574 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ.4 ஆயிரத்து 637ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 63 குறைந்துள்ளது.