சென்னை:சென்னையில் இன்று (ஆகஸ்ட் 22) தங்கம் விலை இரண்டாவது நாளாக அதிகரித்துள்ளது. 22-கேரட் தங்கம் சவரன் ரூ.43,680-க்கு விற்பனை செய்யபபட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் தங்கத்தின் விலை தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் தங்கம் விலை ஏறுவது, இறங்குவதுமாகவே இருந்து வருகிறது.
அதேபோல், ஜூலை 22ம் தேதி 120 ரூபாய் குறைந்தது. இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 440 ரூபாய் குறைந்துள்ளது. பின்னர், ஜூலை 23ம் தேதி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 44,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த மாதத்தொடக்கத்தில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் 1ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 44,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 44,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் 7ம் தேதி ஒரு சவரன் ரூ.44,440க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு ஆகஸ்ட் 8ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.44,320க்கு விற்கப்பட்டது. 9ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.44,240க்கு விற்கப்பட்டது.
தொடர் சரிவில் 44 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தங்கம்:மே மாதம் தொடக்கத்தில் தங்கத்தின் விலை அதிகபட்சமாக ரூ.40 ஆயிரத்திற்கு விற்பனை செய்யபட்டது. அமெரிக்காவில் நிலவிய பொருளாதார சூழல், தொடர்ந்து திவாலான வங்கிகள் என பல்வேறு காரணங்களால், உலக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக முதலீடு செய்ய தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து, தங்கத்தின் விலையானது ஏழைக்கு எட்டாக் கனியாக மாறியிருந்தது. தற்போது தங்கத்தின் விலையானது இறங்குமுகமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.