தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம் என்ன? - சென்னை மாவட்ட செய்திகள்

தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 41 ரூபாய் அதிகரித்து ரூ.5,191ஆகவும், சவரனுக்கு 328 ரூபாய் உயர்ந்து ரூ.41 ஆயிரத்து 528 ஆகவும் ஏற்றம் கண்டுள்ளது.

தங்கம் விலை உயர்வு
தங்கம் விலை உயர்வு

By

Published : Jan 3, 2023, 10:37 AM IST

தங்கம் விலை தொடர்ந்து 4ஆவது நாளாக இன்றும் விலை அதிகரித்துள்ளது. சவரன் 41,500 ரூபாயைக் கடந்துள்ளது. தங்கம் விலை இன்று கிராமுக்கு 41 ரூபாயும், சவரனுக்கு 328 ரூபாயும் விலை அதிகரித்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,150ஆகவும், சவரன், ரூ.41,200 ஆகவும் இருந்தது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன.3) கிராமுக்கு 41 ரூபாய் அதிகரித்து ரூ.5,191ஆகவும், சவரனுக்கு 328 ரூபாய் உயர்ந்து ரூ.41 ஆயிரத்து 528 ஆகவும் ஏற்றம் கண்டுள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இந்த விலை உயர்வு அடுத்துவரும் பண்டிகைக் காலம் வரை தொடரலாம் என சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து, ரூ.75.50ஆக ஏற்றம் கண்டுள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து, ரூ.75,500 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: பொங்கல் பரிசு: இன்று முதல் டோக்கன் விநியோகம்

ABOUT THE AUTHOR

...view details