தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்களுக்கு ஒரு குட் நியூஸ்... தொடர்ந்து சரிவில் உள்ள தங்கம்: முதலீடு செய்ய இதுவே சரியான தருணம்! - silver price in chennai

How to Invest on Gold: கடந்த சில மாதங்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, தற்போது தொடர்ந்து சரிவில் இருப்பதற்கான காரணம் என்ன? இந்த தொகுப்பில் காணலாம்.

today gold rate in chennai
தங்கம் இன்றைய விலை

By

Published : Aug 17, 2023, 12:44 PM IST

சென்னை: உலக அளவில் தங்கத்தின் விலை மாற்றமானது, டாலரின் மத்திப்பில் நேரடியான தொடர்பைக் கொண்டுள்ளது. அதாவது சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தான் தங்கத்தின் விலையானது நிர்ணயிக்கப்படுகிறது.

இதனால் தங்கத்தின் விலை தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. பொதுவாக, வருடந்தோரும் ஆடி மாதம் என்றாலே எந்த ஒரு விஷேச நிகழ்வுகளும் இருக்காது. ஆகையால், தங்கத்தின் விலை சற்று குறைந்து காணப்படும் என்பர். கடந்த ஜூலை 22ம் தேதி 120 ரூபாய் குறைந்த தங்கம், 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு 440 ரூபாய் குறைந்தது. இம்மாதத் தொடக்கத்தில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது.

தொடர் சரிவில் 44 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தங்கம்: மே மாதம் தொடக்கத்தில் தங்கத்தின் விலை அதிகபட்சமாக, ரூ.40 ஆயிரத்திற்கு விற்பனை செய்யபட்டது. அமெரிக்காவில் நிலவிய பொருளாதார சூழல், தொடர்ந்து திவாலான வங்கிகள் என பல்வேறு காரணங்களால், உலக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக முதலீடு செய்ய தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து, தங்கத்தின் விலையானது ஏழைக்கு எட்டாக் கனியாக மாறியிருந்தது. தற்போது தங்கத்தின் விலையானது இறங்குமுகமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் நிலவரம்: கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 12) தங்கத்தின் விலை வீழ்ச்சியை சந்தித்தது. 22 கேரட் தங்கமானது ஒரு கிராமுக்கு ரூ.5 ஆயிரத்து 500க்கும், ஒரு சவரன் ரூ.44 ஆயிரத்திற்கும் விற்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை (ஆகஸ்ட் 14) தங்கம் கிராமுக்கு ரூ.5 குறைந்து, ரூ.5 ஆயிரத்து 495க்கும் சவரன் ரூ.43 ஆயிரத்து 960-க்கு விற்கபட்டது.

அதே நேரத்தில் பல மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை 44 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 15) தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 மட்டும் உயர்ந்து, சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.44 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று ஆகஸ்ட் 16 ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து 43 ஆயிரத்து 960க்கு விற்பனையாகிறது.

அதாவது ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5 ஆயிரத்து 495க்கு விற்பனை செய்யபட்டது. மேலும், ஆகஸ்ட் 12ம் தேதி முதல் இன்று வரை தங்கத்தின் விலையில் பெரிதும் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சொல்லப் போனால், கடந்த 5 நாட்களாக கிராமுக்கு 5 ரூபாய் வித்தியாசத்தில் தான் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இந்நிலையில், 5 நாட்களாக ஒரு கிராம் தங்கம் 5,500 மற்றும் 5,495 என்ற விலையில் தான் விற்பனையானது.

மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை: சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 16) கிராமுக்கு ரூ.39 குறைந்து ரூ.5 ஆயிரத்து 456க்கும், சவரனுக்கு ரூ.312 குறைந்து ரூ.43 ஆயிரத்து 648க்கும் விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.47 ஆயிரத்து 408க்கு விற்பனையாகிறது. இதேப்போல் வெள்ளி விலை கிராமுக்கு 0.50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.70க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை ரூ.75 ஆயிரத்து 700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதுவே தங்கத்தில் முதலீடு செய்ய சரியான தருணம், ஆகையால் மக்களே விரைந்திடுங்கள்.

இதையும் படிங்க: அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்கக்கோரி மனுத் தாக்கல் - காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details