சென்னை:பன்னாட்டு விமான நிலையத்திற்கு இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கிடைத்தது. அதனடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் கொழும்புவில் இருந்து வந்த விமான பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது சென்னை மண்ணடியைச் சேர்ந்த தமீம் அன்சாரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த சஜிதா யாஸ்மீன் ஆகியோரிடம் சோதனை நடத்தியதில் இருவரிடமும் சுமார் 72 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1 கிலோ 596 கிராம் தங்கம் இருந்தது தெரியவந்தது. தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இருவரையும் கைது செய்தனர்.