தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி:அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கம்

கூட்டுறவு வங்கிகளில் குடும்ப அட்டை, ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை சரியாக அளித்தால் மீண்டும் ஆய்வு செய்து நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தலைமைச் செயலகம்
தமிழ்நாடு தலைமைச் செயலகம்

By

Published : Dec 30, 2021, 9:45 AM IST

சென்னை:கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்ற 48,84,726 பேரில் 35,37,693 பேர் தள்ளுபடி பெற தகுதியற்றவர்கள் என கூட்டுறவுத்துறை பதிவாளர் அறிவிப்பு வெளியானது.

நகைக்கடன் தள்ளுபடி

அதில், நகைக்கடன் தள்ளுபடி பெறுவதற்குத் தமிழ்நாடு அரசு குடும்ப அட்டை, ஆதார் அட்டை எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள், ஒரே குடும்ப அட்டையில் உள்ள வேறு உறுப்பினர்கள் கடன் பெற்றிருந்தாலோ, பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றிருத்தல், அரசு ஊழியர், கூட்டுறவு பணியாளர், சங்க நிர்வாகி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்டோர் கடன் தள்ளுபடி பெற தகுதியற்றவர்கள் என கூறப்பட்டிருந்தது.

அந்த அடிப்படையில், நகைக் கடன் தள்ளுபடிக்கு தகுதியான நபர்களை கண்டறிவதற்காக 51 விதமான தகவல்களை சேகரித்து தொகுக்கப்பட்டு கணினி மூலம் விரிவாக பகுப்பாய்வு செய்யப்பட்டது.

கடந்த நான்கு மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த ஆய்வுப் பணி மூலம், தகுதி பெறும் பயனாளிகள் மற்றும் தகுதி பெறாதப் பயனாளிகளின் உத்தேச இறுதிப் பட்டியல் கடிதத்தில், 48,84,726 நகைக்கடன் விவரங்கள் அனைத்தும் கணினி மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு, அதில் 35,37,693 கடன்கள் தள்ளுபடி பெறாத நேர்வுகள் என்று முடிவு செய்யப்பட்டு, அந்தப் பட்டியல்கள் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு பதிவாளர் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறது.

மீண்டும் விவரங்கள் அளிக்க வாய்ப்பு

இந்நிலையில், நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், ”குடும்ப அட்டை, ஆதார் அட்டை விவரங்கள் சரியாக இல்லையென கூறி நகைக்கடன்கள் தள்ளுபடி சலுகை கிடைக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட உள்ளது.குடும்ப அட்டை, ஆதார் விவரங்களைச் சரியாக வழங்காதவர்கள் அதனைச் சரியாக அளித்தால் மீண்டும் ஆய்வு செய்து நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

கடந்த ஆட்சியில் நகைக்கடன் மூலம் கோடிக்கணக்கில் மோசடிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், நகைக்கடன் தள்ளுபடியில், அடிப்படையில் உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வைத்தவர்களில் 10,18,066 (50%) பேருக்கு கடன் தள்ளுபடி உண்டு,நகை கடன் தள்ளுபடி பெறாதவர்களுக்கான காரணங்கள் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே அது குறித்த அடிப்படைத்தன்மையற்ற வதந்திகளையும், செய்திகளையும் வெளியிட வேண்டாம்", எனவும் அந்த அறிக்கை வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:weightlifting champion: ஆசிய பளுதூக்கும் போட்டியில் பதக்கம் வென்ற திமுக எம்எல்ஏ!

ABOUT THE AUTHOR

...view details