துபாயிலிருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் கடத்தல் பொருட்கள் இருப்பதாக விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தீவிர சோதனையில் அலுவலர்கள் ஈடுபட்டனர்.
சென்னை விமான நிலையத்தில் தங்கம், லேப்டாப்கள், வெளிநாட்டு சிகரெட்கள் பறிமுதல் - சென்னை விமான நிலையம்
சென்னை: விமான நிலையத்தில் தங்கம், லேப்டாப்கள், வெளிநாட்டு சிகரெட்கள் ஆகியவற்றை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் தங்கம், லேப்டாப்கள், வெளிநாட்டு சிகரெட்கள் பறிமுதல்
அப்போது ராமநாதபுரத்தை சோ்ந்த சாகுல் அமீது (47) என்பவர் ரூ.16 லட்சம் மதிப்புடைய 405 கிராம் தங்கம், ரூ.ஒரு லட்சம் மதிப்புடைய லேப்டாப்கள், வெளிநாட்டு சிகரெட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
அவரிடம் இருந்த கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்த அலுவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்!