சென்னை: வேளச்சேரி அருகே வ.உ.சி.நகர் பிரதான சாலையில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கண்ணன். இவர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த டிசம்பர் 23ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றிற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். நேற்றிரவு (டிசம்பர் 31) வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர், கண்ணனை செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.
பூட்டிய வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை.. 30 சவரன் தங்க நகை கொள்ளை.. - வேளச்சேரி
வேளச்சேரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து, 30 சவரன் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து கண்ணனின் உறவினர் வேணுகோபால், கண்ணன் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார். அபோது வீட்டில் இருந்து 30 சவரன் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து வேளச்சேரி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பறி விசாரனை செய்து வருகின்றனர். இதே போன்று, கீழ் தளத்தில் சந்தோஷ் என்பவர் வீட்டிலும் கொள்ளை முயற்சி நடத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல்