தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே நாளில் ரூ.43.5 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்! - GOLD trafficking

சென்னை: விமானநிலையத்தில் ஒரே நாளில் ரூ.43.5 லட்சம் மதிப்புடைய தங்கம், வெளிநாட்டு பணம், மின்னனு சாதனங்கள், சிகரெட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

trafficking

By

Published : Aug 29, 2019, 7:11 PM IST

சென்னையைச் சேர்ந்த இசாக் கான் (26), அஸ்லாம் நிஹார் (22) ஆகிய இருவரும் சென்னை விமான நிலையத்தில் சந்தேகப்படும்படி சுங்கத்துறையினர் கண்ணில் பட்டுள்ளனர். இதனையடுத்து, அவர்களை பரிசோதித்தபோது சிங்கபூா் மற்றும் துபாய் நாடுகளிலிருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.35 லட்சம் மதிப்புடைய தங்கம் மற்றும் மின்னனு சாதனங்கள், சிகரெட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கடத்திவரப்பட்ட வெளிநாட்டு கரன்சி

இதேபோன்று சென்னையில் இருந்து மலேசியாவிற்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.8.5 லட்சம் மதிப்புடைய அமெரிக்க டாலர் பறிமுதல் செய்யப்பட்டது. வெளிநாட்டு பணக்கட்டுகளை உள்ளாடைக்குள் மறைத்து வைத்து எடுத்து சென்ற சோ்ந்த அலி ஜின்னா(35) என்ற பயணியை சுங்கத்துறையினர் கைது செய்தனர்.

இந்தச் சூழலில், சென்னை விமானநிலையத்தில் ஒரே நாளில் ரூ.43.5 லட்சம் மதிப்புடைய தங்கம்,வெளிநாட்டு பணம்,மின்னனு சாதனங்கள்,சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details