சென்னை: கீழ்ப்பாக்கம் பரசு தெருவில் வசிப்பவர் சாய்வெங்கட்பிரசாத் (49). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவரது வீட்டில் கடந்த 15 வருடங்களாக நேபாளத்தைச் சேர்ந்த ராமு, சங்கர் ஆகிய இருவர் வீட்டு வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சாய்வெங்கட்பிரசாத் தனது குடும்பத்துடன் இத்தாலி நாட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது ராமு, சங்கர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இதனையடுத்து கடந்த மே மாதம் 24 ஆம் தேதி சாய்வெங்கட்டுக்கு கொரியர் ஒன்று வந்துள்ளது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உடனே கொரியர் ஊழியர் சாய்வெங்கட்டை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். உடனே அவர் தனது வீட்டில் வேலை செய்து வந்த ராமு, சங்கர் ஆகிய இருவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது இருவரது செல்போனும் சுவிட்ஆப் செய்யப்பட்டிருந்தது.
பின்னர் சாய் தனது கார் ஓட்டுநர் லோகேஷை தொடர்பு கொண்டு கேட்டபோது ராமு, சங்கர் இருவரும் வீட்டில் இருந்து சென்று விட்டதாக தெரிவித்துள்ளார். பின்னர் இத்தாலியிலிருந்து சென்னை திரும்பிய சாய்வெங்கட்பிரசாத் வீட்டிற்கு வந்து பீரோவை திறந்து பார்த்துள்ளார்.