சென்னை: சென்னையில், கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையானது தினமும் ஏற்ற இறத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று (செப்-16) தங்கம் விலை மீண்டும் உயர்ந்து, சவரனுக்கு ரூ.44,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச கமாடிட்டி மார்க்கெட் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
இதனால் தங்கத்தின் விலையானது தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். இம்மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலையானது ஏற்றத்துடன் இருந்த நிலையில், தங்கத்தின் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பாக குறைந்து வந்தன. இந்நிலையில், இன்று (செப்.16) தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளது.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து, 5,500 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 44 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு கிராம் வெள்ளி, 50 காசுகள் உயர்ந்து 77.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 500 ரூபாய் உயர்ந்து 77,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தன.
இதையும் படிங்க:ஒரே நாளில் உச்சம் தொட்ட தங்கம் விலை; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
கடந்த மூன்று நாட்களுக்கு முன் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில், வியாழக்கிழமை அன்று தங்கத்தின் விலையில் மாற்றமன்றி புதன்கிழமை விலையிலே விற்பனை ஆனது. இதைத் தொடர்ந்து, நேற்று மற்றும் இன்றைய தங்கத்தின் நிலவரம் சவரனுக்கு ரூ.400 வரை உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றம், தங்கம் வாங்குபவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய தங்கம் விலை:சென்னையில் இன்று (செப்-16) 22-கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 30 உயர்ந்து ரூ.5,530-க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூபாய் 44,240-க்கும் விற்பனையாகின்றன. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, 8 கிராம் ரூபாய் 48,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வெள்ளி விலை 0.70 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.20-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளியின் ரூபாய்.200 உயர்ந்து, ரூபாய் 78,200 ஆக விற்பனையாகி வருகிறது.
தங்கத்தின் இன்றைய நிலவரம்:(செப்.16):
- 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.5,530
- 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.44,240
- 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.6,000
- 8 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.48,000
- 1 கிராம் வெள்ளி - ரூ.78.20
- 1 கிலோ வெள்ளி - ரூ.78,200
இதையும் படிங்க:மகளிர் உரிமைத் தொகை : தனியார் பள்ளியின் ஆயிரம் மாணவிகள் "முதல்வருக்கு நன்றி"!