சென்னை:கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இதன் நிலையில் இன்று (செப்-15) சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, ரூபாய் 44,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச கமாடிட்டி மார்க்கெட் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் தங்கத்தின் விலையானது, தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். இம்மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலையானது, ஏற்றத்துடன் இருந்த நிலையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தன.
இரு நாட்களுக்கு முன் தங்கம் விலை:அதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 320 குறைந்தது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 40 குறைந்து ரூபாய் 5480-க்கும், இதேப்போல், தங்கம் சவரனுக்கு ரூபாய் 320 குறைந்து ரூபாய் 43,840க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ரூபாய் 77க்கும், ஒரு கிலோவிற்கு ரூபாய் 1000 குறைந்து ரூபாய் 77,000 விற்பனை செய்யப்பட்டன.
நேற்று தங்கம் விலை:நேற்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி புதன்கிழமை விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தன.