சென்னை: சென்னையில் 22-கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.5,590க்கும், ஒரு சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,720க்கும் விற்பனை ஆகின்றன. இதேபோல் வெள்ளி ஒரு கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ரூ.75.40-க்கும், ஒரு கிலோவிற்கு ரூ.600 குறைந்து ரூ.75,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த வாரத்தில் தங்கத்தின் விலையானது சர்வதேச பொருளாதாரச் சூழலின் மத்தியில், கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி சர்வதேச வங்கி, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்க வங்கிகளின் வட்டி விகிதம் என பல்வேறு காரணங்களை முன்வைத்துதான் தங்கத்தின் விலையில் தினமும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது.
மேலும், இஸ்ரேல்-ஹமாஸ் இடையே உருவாகியுள்ள போரின் எதிரொலியாக கடந்த ஒரு மாத காலமாக தங்கத்தின் விலையில் தினமும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டது. தற்போது சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை குறைந்தால் உள்நாட்டு பொருளாதாரச் சந்தையிலும் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது.