ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பேராசிரியராக பணியாற்றுபவர் ஜான் கிருபாகரன். இவர் நேற்று இரவு தனது மனைவி பிரின்லியுடன் உறவினர் திருமணத்திற்கு கடலூர் செல்வதற்காக, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புதுச்சேரி பேருந்தில் பயணித்துள்ளார்.
பேருந்தில் பயணித்த பேராசிரியரிடம் கைவரிசை! - சென்னை
சென்னை: பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பேராசிரியரிடமிருந்து 35 சவரன் நகை மற்றும் 19 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
![பேருந்தில் பயணித்த பேராசிரியரிடம் கைவரிசை!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3305448-thumbnail-3x2-iughhidfh.jpg)
gold-and-money-theft
பேருந்தில் சென்று கொண்டிருக்கையில், சிறுது நேரம் உறங்கிய பேராசிரியர், மதுரவாயல் டோல்கேட் அருகே எழுந்து பார்த்தபோது 35 சவரன் நகை மற்றும் 19 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்த பை காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகினார்.
கோயம்பேடு காவல்நிலையம்
பின்னர் பேருந்தில் இருந்து இறங்கி கோயம்பேடு சென்று, அங்குள்ள காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.