தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய மருத்துவக் காப்பீடு திட்டம்: 4 ஆண்டுகளுக்கு அமல்படுத்த அரசாணை வெளியீடு!

அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் இன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு அமல் படுத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவக் காப்பீடு திட்டம்
மருத்துவக் காப்பீடு திட்டம்

By

Published : Jul 1, 2021, 7:45 PM IST

Updated : Jul 1, 2021, 8:55 PM IST

சென்னை:அரசு ஊழியர்களின் புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்திற்காக ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் மாதாந்திர தொகை 300 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் இன்று (ஜூலை 01) முதல் அமலுக்கு வருகிறது. அதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளை அரசாணையாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்துக்காக தமிழ்நாடு அரசு, யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் கம்பெனியுடன் 4 ஆண்டு காலம் ஒப்பந்தம் செய்துள்ளது.

அந்த ஒப்பந்தம் 2021ஆம் ஆண்டு ஜூலை 01ஆம் தேதி முதல் 2025ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை 4 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். இந்த புதிய காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ள 1,169 மருத்துவமனைகளில், 203 வகையான சிகிச்சைகளுக்கு, காப்பீட்டுத் தொகை அனுமதிக்கப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய காப்பீடுக்கான வழிக்காட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி,

மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை மூலம் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

அரிய வகை நோய்களுக்கான சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் தேவைப்படுவோர் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை மூலம் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

இதற்காக ஒவ்வொரு அரசு ஊழியரிடம் இருந்தும் மாதந்தோறும் ரூ.300 பிடித்தம் செய்யப்படும்.

ஒப்பந்த ஊழியர்களுக்கு இந்த காப்பீட்டுத் திட்டம் பொருந்தாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர் புதிய நல்வாழ்வு காப்பீட்டு திட்டம்

1. காலம்: 01.07.21 முதல் 30.06.25 வரை 4 ஆண்டுகள்

2. சந்தா தொகை180 ரூபாயிலிருந்து ரூ.300 ( 295 +5) ஆக உயர்த்தப்பட்டுள்ளது

3. காப்பீட்டு தொகை ரூ.4 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

4.புற்று உறுப்பு மாற்று சிகிச்சை ரூ.7.50 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாகவும், கண்புரை அறுவை சிகிச்சைக்கு ரூ.25,000 என்பது ரூ.30,000 ஆகவும், கர்ப்பப்பை அகற்றும் சிகிச்சைக்கு ரூ.45 000 என்பதில் இருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளன

5. காப்பீட்டுத் திட்டத்தில் இல்லாத மருத்துவமனைகளில் ஏதேனும் அவசரத்தின் அடிப்படையில் சிகிச்சை எடுத்துக் கொண்டாலும், சிகிச்சைத் தொகையில் 75 விழுக்காடு பின்னர் வழங்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'வணிகர்கள் வரியைத் தவறாமல் செலுத்த வேண்டும்'

Last Updated : Jul 1, 2021, 8:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details