தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம்! - e-pass

சென்னை: நாளை முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

palanisamy
palanisamy

By

Published : Jun 24, 2020, 10:19 PM IST

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "மக்கள் தொகை அதிகம் என்பதால் சென்னையில் கரோனா தொற்று எளிதாகப் பரவுகிறது. ஒரே மண்டலத்திற்குள் இருந்தாலும் நாளை முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஐந்து நாள்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. ஒரு மாவட்டம் விட்டு மற்றொரு மாவட்டம் செல்வதற்கு கட்டாயம் இ-பாஸ் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

நாளை முதல் ஜூன் 30ஆம் தேதி வரை மாவட்டங்களுக்குள் மட்டுமே போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படும். மாவட்டங்கள் இடையே கார், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட தனியார் போக்குவரத்து ரத்துசெய்யப்படுகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான மருத்துவர்கள், செவிலியர் அனுப்பிவைக்கப்படுவார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சூதாட்டம் ஆடிய அரசுப் பள்ளி தலைமையாசிரியர் உள்பட 9 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details