சென்னை அடுத்த தாம்பரம் சானிடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவமனையில் சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்கம் இணைந்து தமிழும், தமிழ் மருத்துவமும் என்ற விழிப்புணர்வு விழா நடத்தியது.
இவ்விழாவில் கலந்துகொண்ட தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன், அயோத்திதாச பண்டிதர் மற்றும் திருமூலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது தமிழ் மற்றும் தமிழ் மருத்துவ மேம்பாட்டு பணிகளுக்காக பல்வேறு திட்டங்களை முன்வைத்து சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்கம் ஆகிய இருவருக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடபட்டது.