தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை மாநகராட்சிக்கு குளோபல் ஸ்மார்ட் சிட்டி ஃபோரம் விருது

சென்னை: நீர்நிலைகள் புனரமைப்பு, மழைநீர் சேகரிப்புத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தியமைக்காக 'குளோபல் ஸ்மார்ட்சிட்டி ஃபோரம் விருது 2020' என்ற விருது பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு குளோபல் ஸ்மார்ட் சிட்டி ஃபோரம் விருது
சென்னை மாநகராட்சிக்கு குளோபல் ஸ்மார்ட் சிட்டி ஃபோரம் விருது

By

Published : Feb 5, 2021, 12:08 PM IST

நீர்நிலைகள் புனரமைப்பு, மழைநீர் சேகரிப்புத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தியமைக்காக இ.டி. கவர்மெண்ட்.காம் அமைப்பு மூலம் நடைபெற்ற 'குளோபல் ஸ்மார்ட் சிட்டி ஃபோரம் விருது 2020' என்ற நிகழ்ச்சியில் சிறப்பு நீர் மேலாண்மை, சுகாதார விருது பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.24.93 கோடியில் 62 நீர்நிலைகள், 54 கோயில் குளங்கள் மறுசீரமைக்கப்பட்ட உள்ளன. மேலும் ரூ.34.66 கோடி மதிப்பீட்டில் வில்லிவாக்கம் ஏரி மறு சீரமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது, 133 நீர்நிலைகள் பல்வேறு நிதி ஆதாரங்களின் மூலம் சீரமைக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சிக்கு குளோபல் ஸ்மார்ட் சிட்டி ஃபோரம் விருது
இது மட்டுமின்றி 280 சமுதாய கிணறுகள், 22 ஆயிரம் மழைநீர் சேகரிப்பு அமைப்பு, 2000 மழைநீர் சிறிய கிணறு அமைக்கும் பணி மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மழைநீரை அதிக அளவில் சேமித்தன்மூலம் சென்னையில் நீர்மட்டம் 2.5 முதல் 6 மீட்டர் அளவிற்கு உயர்ந்துள்ளது.
இதற்காக, நீர்நிலைகள் புனரமைப்பு, மழைநீர் சேகரிப்புத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தியமைக்காக இ.டி. கவர்மெண்ட்.காம் அமைப்பு மூலம் நடைபெற்ற 'குளோபல் ஸ்மார்ட் சிட்டி ஃபோரம் விருது 2020' என்ற நிகழ்ச்சியில் சிறப்பு நீர் மேலாண்மை, சுகாதார விருது சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது.
விருதுக்காக இந்தியா முழுவதும் 25 அரசு, தனியார் நிறுவனங்களின் மூலம் 12 வகையான அம்சங்களில் 130 திட்டங்கள் முன்மொழியப்பட்டன.
இதில் சென்னை மாநகராட்சியின் நீர் மேலாண்மைத் திட்டங்களைப் பாராட்டி சிறப்பு நீர் மேலாண்மை, சுகாதாரம் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை முதலமைச்சருக்கு காண்பித்து தலைமைச் செயலகத்தில் ஆணையர் பிரகாஷ் வாழ்த்துப் பெற்றார்.

ABOUT THE AUTHOR

...view details