சென்னை: சமீபத்தில் தமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகளின் காவிரி பிரச்சினை தலைதூக்கியுள்ளது. இதனை எதிர்த்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நாளை டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேசவுள்ளார்.
மேலும், நாளை டெல்லியில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற இருக்கும் நிலையில், தமிழக எம்பிக்கள் டெல்லிக்கு விரைந்துள்ளனர். சிறப்புக் கூட்டதிற்குப் பிறகு அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக் கட்சி எம்பிக்களும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை டெல்லியில் அவரது அலுவலகத்தில் சந்திக்கவுள்ளனர். இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் பங்கேற்க உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நாளை டெல்லியில் நடக்கவிருக்கம் நிலையில், அதில் பங்கு பெற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் சென்றார். அப்போது அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், "நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நாளை துவங்க இருக்கிறது. இன்று மாலை டெல்லியில் இரு அவைகளிலுள்ள கட்சிகளுடைய தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதில் பங்கேற்க நான் இன்று டெல்லி செல்ல உள்ளேன்.