சென்னை: ஆவடி அடுத்த பட்டாபிராம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர். இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கிறிஸ்டோபர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் விரைவில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கிறிஸ்டோபரின் காதலி புற்று நோய் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.
தற்கொலை தவிர் - தலை நிமிர்ந்து வாழ்! இதனால் கிறிஸ்டோபர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் தனது சகோதரிக்கு வாட்ஸ் ஆப்பில், “உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது” என குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
பின்னர் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், ரயில் தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஆவடி ரயில்வே காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:காதலுக்கு கை கொடுத்த ‘கூகுள் டிரான்ஸ்லேடர்’ - நாடுகள் கடந்த டேட்டிங் காதல்!