சென்னை: பூந்தமல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்றுவந்த மாணவி மாங்காட்டில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக அந்த மாணவி உருக்கமான கடிதம் ஒன்றை எழுதிவைத்துள்ளார். தனது தற்கொலைக்கு பாலியல் அத்துமீறல் காரணம் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து மங்காடு காவல் துறையினர் நான்கு தனிப்படைகள் அமைத்துவிசாரித்தனர். மாணவியின் செல்போனில் கடைசியாகப் பேசிய பள்ளி, கல்லூரி மாணவர்கள் நான்கு பேரை தனிப்படையினர் பிடித்தனர்.
விசாரணையில், "மாங்காட்டைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (21), அதிகமாக அந்த மாணவிக்கு ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பியிருந்தது தெரியவந்தது. அவர் குன்றத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்துவருகிறார்.