சென்னை:மதுரவாயல் ஏரிக்கரையை சேர்ந்த அஸ்வினி (23), ஆலப்பாக்கத்தில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்து வந்தார். இவர் ஜனவரி 6ஆம் தேதி, தான் பணிபுரியும் கடையின் கழிவறையில் இருந்த ஆசிட்டை எடுத்து குடித்துள்ளார். அங்கு மயங்கிய நிலையில் கிடந்தவரை, சக ஊழியர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அதன்பின் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அஸ்வினி, சிகிச்சை பலனின்றி ஜனவரி 7ஆம் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அஸ்வினியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.